/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்டையூர் அருகே தடுப்புச் சுவர் இல்லாத பாலம்: தொடரும் விபத்து
/
கோட்டையூர் அருகே தடுப்புச் சுவர் இல்லாத பாலம்: தொடரும் விபத்து
கோட்டையூர் அருகே தடுப்புச் சுவர் இல்லாத பாலம்: தொடரும் விபத்து
கோட்டையூர் அருகே தடுப்புச் சுவர் இல்லாத பாலம்: தொடரும் விபத்து
ADDED : செப் 22, 2024 03:00 AM

காரைக்குடி, : கோட்டையூர் அருகே நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
கோட்டையூர் பேரூராட்சிக்குட்பட்ட வேலங்குடி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே திருச்சி நெடுஞ்சாலையில் நடுவே கால்வாய்க்காக பாலம் கட்டப்பட்டது.
பாலம் கட்டப்பட்டு இருபுறமும் தடுப்புச் சுவர் முறையாக கட்டப்படாததால் சாலையோரம் 8 அடி பள்ளம் உள்ளது. வளைவில் உள்ள இந்த பள்ளத்தை வாகன ஓட்டிகள் அருகில் வந்தால் மட்டுமே காண முடியும்.
இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயமடைவது தொடர்கதை ஆகி வருகிறது. நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கார் சிக்கியது.
அதிர்ஷ்டவசமாக பள்ளத்தில் கார் விழாமல் தொங்கியபடி நின்றது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து காரில் சிக்கிய குழந்தைகள் உட்பட அனைவரையும் காப்பாற்றினர். காரை இயந்திரம் மூலம் மீட்டனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், நெடுஞ்சாலையின் வளைவில் உள்ள பள்ளம்வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கார் பள்ளத்தில் விழுந்திருந்தால் அனைவரும் பிழைத்திருப்பதே கடினம். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து பேரூராட்சியில் புகார் அளித்தால் நெடுஞ்சாலைத்துறை என்கின்றனர். நெடுஞ்சாலைத் துறையிடம் புகார் அளித்தால் பேரூராட்சி என்கின்றனர். வாகன ஓட்டிகளின் உயிர் மீது அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.