/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நுாறு அரசு பள்ளிகளில் கட்டடம் சேதம் ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சம்
/
நுாறு அரசு பள்ளிகளில் கட்டடம் சேதம் ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சம்
நுாறு அரசு பள்ளிகளில் கட்டடம் சேதம் ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சம்
நுாறு அரசு பள்ளிகளில் கட்டடம் சேதம் ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சம்
ADDED : ஆக 06, 2025 08:44 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சேதமடைந்துள்ள 100 வகுப்பறை கட்டடங்களை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டடம் கட்ட பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள்,ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 353 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும்,129 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன.தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 359 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளும் 109 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன.
இவைகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவற்றில் 100க்கும் மேற்பட்ட வகுப்பறை கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது.இதில் பெரும்பாலானவை கிராமப்புற பள்ளிகள். இந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய வகுப்பறையின்றி நெருக்கடியில் படித்து வருகின்றனர்.
சேதம் அடைந்துள்ள வகுப்பறை கட்டடத்தில் மாணவர்களை வைத்து பாடம் நடத்தவும் ஆசிரியர்கள் அச்சப்படுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட தேவகோட்டை அருகே மாவிடுதிக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூரை சிமென்ட் பெயர்ந்து விழுந்து 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கிராமபுறங்களில் சேதம் அடைந்துள்ள அரசு பள்ளி கட்டடத்திற்கு மாணவர்களை அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.
பள்ளி கல்வித்துறை மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள சேதம் அடைந்துள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.