/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவரம்பூரில் மாட்டு வண்டி பந்தயம்
/
தேவரம்பூரில் மாட்டு வண்டி பந்தயம்
ADDED : ஜன 18, 2025 07:46 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம்தேவரம்பூரில் நடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் 35 வண்டிகள் பங்கேற்றன.
பந்தயம் சிவகங்கை ரோட்டில் கல்லுவெட்டுமேட்டிலிருந்து துவங்கியது. பெரியமாடு பிரிவில் 12 வண்டிகள் பங்கேற்றன.
முதலிடத்தை கொல்லங்குடி உடையப்பதேவர், இரண்டாமிடத்தை கல்லல் உடையப்பாசக்தி அம்பலம், மூன்றாமிடத்தை பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லத்தேவர், நல்லாங்குடி முத்தையா பெற்றனர்.
சின்னமாடு பிரிவில் 23 வண்டிகள் பங்கேற்றன.அதில் முதலிடத்தை தென்மாப்பட்டு லண்டன் சுபாஸ், இரண்டாமிடத்தை ரணசிங்கபுரம் வினோத், மூன்றாமிடத்தை புதுக்கோட்டை எம்.எம்.பிரதர்ஸ், நான்காமிடத்தை மாவூர் பிரகன்யா மோகன் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.