/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூவந்தியில் மாட்டு வண்டி பந்தயம்
/
பூவந்தியில் மாட்டு வண்டி பந்தயம்
ADDED : ஜன 06, 2025 12:12 AM

பூவந்தி; பூவந்தியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய, சிறிய மாடு என இரு பிரிவாக போட்டி நடந்தது.
இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 46 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. மதுரை -- சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மாட்டு வண்டிகளுக்கு பூவந்தியில் இருந்து படமாத்தூர் விலக்கு வரை 8 மைல் தூரமும், சிறிய மாட்டு வண்டிகளுக்கு பூவந்தியில் இருந்து திருமாஞ்சோலை வரை 6 மைல் தூரமும் பந்தய எல்லைகளாக நிர்ணயித்து நடந்தது.
பெரிய மாட்டு பிரிவில் 12 ஜோடிகளும், சிறிய மாட்டு பிரிவில் 34 ஜோடிகளும் பங்கேற்றன. போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகள் ஒன்றை ஒன்று முந்தி சென்று பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மாட்டு வண்டி எல்லை போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு வழங்கினர்.