/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேதமடைந்த ரோட்டால் பஸ் நிறுத்தம்: மாணவர்கள் அவதி
/
சேதமடைந்த ரோட்டால் பஸ் நிறுத்தம்: மாணவர்கள் அவதி
ADDED : அக் 11, 2024 05:14 AM

சிவகங்கை: இளையான்குடி அருகே மெய்யனேந்தல் ஊராட்சியில் சேதமடைந்த ரோட்டில் உள்ள பள்ளத்தால் கிராமத்திற்கு வர வேண்டிய அரசு பஸ் வர மறுப்பதால் பள்ளி மாணவர்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மெய்யனேந்தல் கிராமம். இந்த கிராமத்திலிருந்து அதிகரை செல்லக்கூடிய ரோடு சேதமடைந்து 3 இடங்களில் மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளன. மழைக்காலம் என்பதால் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்களில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. ரோடு முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இந்த பகுதிக்கு அரசு பஸ்கள் வர மறுக்கிறது.
பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மெய்யனேந்தல், அதிகரை, லட்சுமிபுரம், நடுவலசை, கீழாயூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பரமக்குடி, இளையான்குடி சென்றுவர முடியவில்லை. கிராமத்தை சேர்ந்த பள்ளி கல்லுாரி மாணவர்களும் தங்கள் பள்ளிக்கு நேரத்திற்கு செல்லமுடியாமல் அவதிக்குள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
விவசாயி கன்னியப்பன் கூறுகையில், மெய்யனேந்தலில் இருந்து அதிகரை செல்லக்கூடிய ரோட்டின் கண்மாய் கரையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
இதனால் அரசு பஸ் வர மறுக்கிறது. இந்த ரோட்டை சரி செய்ய பலமுறை இளையான்குடி ஊராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்துள்ள ரோட்டை சரி செய்து அரசு பஸ் கிராமத்துக்குள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

