ADDED : ஜூன் 04, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: மதுரை மாவட்டம் மணல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாயழகு 62, பெட்டிக்கடைகளுக்கு தின்பண்டங்கள் சப்ளை செய்து வருகிறார்.
ஜூன் 2 ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு காரில் கடைகளுக்கு ஸ்னாக்ஸ் கொண்டு சென்றபோது, சதுர்வேதமங்கலம் கிழக்குப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோட்டோர மரத்தில் கார் மோதியது.
இதில் காரை ஓட்டிய மாயழகுக்கு தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி மாயழகு இறந்தார். சதுர்வேத மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.