/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாழை, வெங்காயம் காப்பீடு செய்ய அழைப்பு
/
வாழை, வெங்காயம் காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : நவ 06, 2025 07:24 AM
சிவகங்கை: வாழை, வெங்காயம், சிவப்பு மிளகாய் பயிர் காப்பீடு தொகைக்கு, பிரீமியம் செலுத்த கால அவகாசம் வழங்கி, தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய தாலுகாக்களில் வாழை, வெங்காயம், சிவப்பு மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்யவதற்கான பிரீமிய தொகை செலுத்தலாம்.
வாழைக்கு ஏக்கருக்கு காப்பீடு தொகை ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 312. இதற்கான பிரீமிய தொகை ரூ.11,065.60யை 2026 பிப்., 28 க்குள் செலுத்த வேண்டும். வெங்காயம் ஏக்கருக்கு காப்பீடு தொகை ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 629க்கு பிரீமியம் ரூ.5,131.45 கட்ட வேண்டும்.
சிவப்பு மிளகாய் ஏக்கருக்கு காப்பீடு தொகை ரூ.71,383க்கு பிரீமியம் ரூ.428.30 செலுத்த வேண்டும். வெங்காயம், சிவப்பு மிளகாய்க்கு பிரீமிய தொகையை 2026 ஜன., 31 க்குள் செலுத்த வேண்டும். விபரங் களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகி பயன்பெறலாம்.

