/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி, கல்லுாரி அருகில் போதை பொருள் விற்பனை தகவல் தெரிவிக்க அழைப்பு
/
பள்ளி, கல்லுாரி அருகில் போதை பொருள் விற்பனை தகவல் தெரிவிக்க அழைப்பு
பள்ளி, கல்லுாரி அருகில் போதை பொருள் விற்பனை தகவல் தெரிவிக்க அழைப்பு
பள்ளி, கல்லுாரி அருகில் போதை பொருள் விற்பனை தகவல் தெரிவிக்க அழைப்பு
ADDED : ஜன 24, 2025 04:35 AM
காரைக்குடி: காரைக்குடி, புதுவயல் பகுதி பள்ளி, கல்லுாரி அருகே புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தின் கல்வி நகரமாக காரைக்குடி விளங்கி வருகிறது. இங்கு அழகப்பா பல்கலை, அழகப்பா அரசு கலைக்கல்லுாரி மற்றும் இன்ஜி கல்லுாரி பாலிடெக்னிக் மற்றும் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் கல்லுாரிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதே போல சாக்கோட்டை புதுவயல் கண்டனுார் கோட்டையூர் பகுதிகளிலும் ஏராளமான பள்ளி கல்லுாரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களை குறி வைத்து கஞ்சா, புகையிலை குட்கா பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
காரைக்குடி, சாக்கோட்டை உட்பட பல பகுதிகளிலும் பள்ளிகளின் அருகே உள்ள குறிப்பிட்ட சில கடைகளில் புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்டவை விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது.
தவிர மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையும் அதிகரித்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.போலீசார் அவ்வப்போது பெயரளவிற்கு வழக்குப்பதிவு செய்வதோடு சரி முழுமையாக கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெற்றோர்கள் கூறுகையில்: சமீபகாலமாக பள்ளி கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. அவ்வப்போது 10 கிராம், 20 கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால், முழுமையாக தடுக்க முடிவதில்லை. உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய புகையிலை குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டாலும் மறைமுக விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.
கஞ்சா இல்லாத காரைக்குடி
காரைக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன் கூறுகையில்: பள்ளிகளின் அருகில் உள்ள கடைகள் உட்பட அனைத்து கடைகளிலும் புகையிலை விற்பனையை தடுக்க தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகிறோம்.
பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், புகையிலை விற்பவர் குறித்து தகவல் அளித்தால், சம்பந்தப்பட்டவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய கூட தயாராக உள்ளோம். கஞ்சா, புகையிலை இல்லாத காரைக்குடியை உருவாக்குவதே இலக்கு என்றார்.

