/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூடுதல் கண்காணிப்பிற்கு கிராமங்களில் கேமரா
/
கூடுதல் கண்காணிப்பிற்கு கிராமங்களில் கேமரா
ADDED : டிச 14, 2024 05:48 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் மகிபாலன்பட்டி,பையூர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
மாவட்ட அளவில் எஸ்.பி. அறிவுறுத்தலின் பேரில் அண்மையில் நடந்த குற்றச்செயல்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு வசதியாக கூடுதல் கண்காணிப்பை தேவையான இடங்களில் ஏற்படுத்த கேமராக்களை நிறுவ போலீசார் திட்டமிட்டனர். கண்டவராயன்பட்டி இன்ஸ்பெக்டர் பெரியார், எஸ்.ஐ.,ஸ்ரீதர் உள்ளிட்ட போலீசார் அப்பகுதி கிராமத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனையடுத்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மகிபாலன்பட்டி, பையூர் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் கிராமத்தினர் ஒத்துழைப்புடன் 10 கேமராக்கள் நிறுவப்பட்டன.
டி.எஸ்.பி. செல்வகுமார் கேமராக்களை கண்காணிப்பு பணிக்கு அர்ப்பணித்தார். மேலும் கேமராப்பதிவுகள் அனைத்தும் கண்டவராயன்பட்டி போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாடு அறையில் கண்காணிக்கப்படும் என்பதையும் தெரிவித்தார். முன்னதாக நெற்குப்பையிலும் இதே போன்று 25 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

