ADDED : ஏப் 24, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே சிலர் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்ததால் எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு நின்ற திருப்புவனத்தை சேர்ந்த சிலம்பரசன் 31, தமிழரசன் 31, அஜய் 29 , ஆகிய 3 பேரையும் பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் விற்பனைக்காக 1.646 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது மதுரை, திருப்புவனம் ஸ்டேஷனில் பல்வேறு வழக்கு நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.