/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை கண்மாயில் கெண்டை மீன்கள் விற்பனை
/
மானாமதுரை கண்மாயில் கெண்டை மீன்கள் விற்பனை
ADDED : அக் 28, 2025 03:46 AM

மானாமதுரை: மானாமதுரையில் தொடர் மழை பெய்ததை தொடர்ந்து கண்மாய் பகுதியில் கெண்டை பொடி மீன்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழு வதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதாலும், வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள தாலும் இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதி கரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும், ஆற்று பகுதி களிலும் ஏராளமானோர் மீன்கள் பிடித்து வருகின்றனர். இவற்றில் கெண்டை பொடி மீன்கள், ஜிலேபி கெண்டை, விரால், கெளுத்தி மற்றும் அயிரை மீன்களை அதிகளவில் கிடைக்கிறது. ஒரு கிலோ ரூ.100-க்கு நேற்று விற்பனை செய்த நிலையில் ஏராளமானோர் இந்த மீன்களை வாங்கி சென்றனர்.
மீன் வியாபாரி கண்ணன் கூறியதாவது:
கெண்டை பொடி மீன்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மழைக்காலங்களில் கிடைக்கும். இதன் ருசி அதிகமாக இருக்கும் என்பதால் ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர், கூறினார்.

