/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்ணங்குடி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் போலி பில் மூலம் ரூ.6.99 லட்சம் மோசடி
/
கண்ணங்குடி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் போலி பில் மூலம் ரூ.6.99 லட்சம் மோசடி
கண்ணங்குடி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் போலி பில் மூலம் ரூ.6.99 லட்சம் மோசடி
கண்ணங்குடி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் போலி பில் மூலம் ரூ.6.99 லட்சம் மோசடி
UPDATED : ஏப் 26, 2025 08:50 AM
ADDED : ஏப் 26, 2025 02:56 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது போலி பில்களை சமர்ப்பித்து அரசு நிதி ரூ.6.99 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு பி.டி.ஓ.,க்கள், உதவி பொறியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 2021 முதல் 2023 வரை பி.டி.ஓ.,வாக பழனியம்மாள் 56, உதவி பொறியாளராக திருமாறன் 56, துணை பி.டி.ஓ.,வாக சுப்பிரமணியன் 56, பணிபுரிந்தனர். அப்போது உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடத்தும் பொருட்களை வாங்க செலவினத்தொகையாக மாவட்ட நிர்வாகம் ரூ.10 லட்சத்து 65 ஆயிரத்து 838 ஒதுக்கியிருந்தது. இந்நிதியை வைத்து ஓட்டுச்சாவடிகளுக்கு மின் விளக்குகள் அமைத்தல், ஷாமியானா பந்தல் போடுதல், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான உணவு உட்பட பல்வேறு செலவினங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டது. தேர்தல் செலவின பில் தொகையை மாவட்ட நிர்வாகத்திற்கு இவர்கள் சமர்ப்பித்தனர். இந்த பில்கள் மீது கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க ஆவணங்களை அதிகாரிகள் சென்னை ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனருக்கு அனுப்பினர்.
இயக்குனரின் உத்தரவின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். பந்தல், ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணையில் தாங்கள் எந்தவித சேவையும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய தேர்தலுக்காக செய்யவும் இல்லை. அதற்கான கட்டணமும் வசூலிக்கவில்லை என வாக்குமூலம் அளித்தனர். அதன் மூலம் பி.டி.ஓ., துணை பி.டி.ஓ., உதவி பொறியாளர் ஆகியோர் போலி பில்களை தயாரித்து அரசு நிதி ரூ.6 லட்சத்து 99 ஆயிரத்து 715 யை மோசடி செய்தது தெரிய வந்தது.
மூவர் மீதும் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்தார். பழனியம்மாள் தற்போதும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,வாகவும், துணை பி.டி.ஓ., சுப்பிரமணியன் தேவகோட்டை பி.டி.ஓ.,வாகவும், உதவி பொறியாளர் திருமாறன் தற்காலிக பணி நீக்கத்திலும் உள்ளனர்.

