/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய வங்கி மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு
/
போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய வங்கி மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு
போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய வங்கி மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு
போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய வங்கி மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 04, 2025 03:15 AM
மானாமதுரை:மானாமதுரை அருகே தனியார் வங்கி மேலாளரிடம் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியதாக மற்றொரு வங்கி மேலாளர், நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சிவகங்கையில் உள்ள இசாப் வங்கியில் மேலாளராக ரவி 35, பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம் பேங்க் ஆப் மகாராஷ்டிரா ராஜகம்பீரம் கிளை நகை மதிப்பீட்டாளர் சீத்தாலட்சுமி 45, அலைபேசியில் மானாமதுரை ஆதனூர் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் ராஜேந்திரன் 12 பவுன் நகை அடகு வைத்திருப்பதாகவும், அதை திருப்ப முடியாததால் நீங்கள் தங்களது வங்கியின் மூலம் திருப்பி கொள்ளுமாறு கூறினார்.
ரவி ராஜகம்பீரத்தில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா கிளைக்கு சென்று ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 346 ஐ செலுத்தி நகைகளை அடகு வைத்த ராஜேந்திரன், வங்கி மேலாளர் ராமலட்சுமியிடம் நகைகளில் பிரச்னை எதுவும் இல்லையே என விசாரித்தார். அதற்குள் அவர்கள் இல்லை என கூறியுள்ளனர்.
பிறகு தன் வங்கிக்கு நகைகளை எடுத்துச் சென்றார்.
நகைகளை பரிசோதனை செய்த போது நகை மதிப்பீட்டாளர் யுவஸ்ரீ போலி நகைகள் என கூறினார். இதையடுத்து சீத்தாலட்சுமி உள்ளிட்ட மூன்று பேர் மீது ரவி போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியதாக மானாமதுரை போலீசில் புகார் கொடுத்தார். மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

