/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பணத்தை இரட்டிப்பதாக கூறி ரூ. 36 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு
/
பணத்தை இரட்டிப்பதாக கூறி ரூ. 36 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு
பணத்தை இரட்டிப்பதாக கூறி ரூ. 36 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு
பணத்தை இரட்டிப்பதாக கூறி ரூ. 36 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 29, 2025 01:38 AM
திருப்புத்துார்:பணத்தை இரட்டிப்பதாக கூறி ரூ.36 லட்சத்தை ஏமாற்றியதாக திருப்புத்துார் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் மின்நகர் அய்யாத்துரை மகள் வாவுசையது ரபியா. இவரிடம் 2022 ல் கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த ரசிக் முகமது, மெகர்நிஷா, திருப்புத்துார் பெரியார் நகர் முகமது நாசர், ஆமீனாமான் ஆகியோர் ரூ.1 லட்சம் செலுத்தினால் மாதம் ரூ. 10 ஆயிரம் வீதம் 10 மாதங்களில் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் ரூ. 17 லட்சத்தை ஆன் லைன் மூலம் முகமது நாசர் கணக்கிற்கு வாவுசையது ரபியா அனுப்பியுள்ளார்.
சில மாதங்கள் கூறியபடி பணம் கொடுத்துள்ளனர். பின்னர் பணம் வரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டு தர மறுத்ததால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவில் திருப்புத்துார் போலீசார் சம்பந்தப்பட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த சுவாமிநாதன் ரூ.15 லட்சம், விஜயா, ருக்மணி,முத்துக்குமார் ஆகியோர் தலா ரூ.1 லட்சம், திருப்புத்துார் சுந்தர்ராஜன் ரூ.1 லட்சம் வீதம் என மொத்தம் ரூ.36 லட்சம் வரை கொடுத்து ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது.

