/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாலியல் தொல்லை ; முதியவர் மீது வழக்கு
/
பாலியல் தொல்லை ; முதியவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 05, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 படித்து வருகிறார். மாணவியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் கிருஷ்ணன் 60.
இவர் மாணவியின், பெற்றோர் வீட்டில் இல்லாத போது பலமுறை மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துஉள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மாணவிக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாத மாணவியை, பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரிய வந்தது.
மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கிருஷ்ணன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.