/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்நடை தீவனம் விலை இருமடங்கு உயர்வு
/
கால்நடை தீவனம் விலை இருமடங்கு உயர்வு
ADDED : டிச 26, 2025 05:27 AM
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் கால்நடை தீவனம் விலை இரு மடங்கு உயர்ந்துவிட்டதால், விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
இந்த வட்டாரத்தில் கீழடி, கொந்தகை, அல்லிநகரம், பழையனூர், மணல்மேடு, பெத்தானேந்தல் கிராமங்களில் 11,667 கறவை மாடுகள், 533 எருமை மாடுகள், 21,370 வெள்ளாடுகள், 20,615 செம்மறி ஆடுகள், 49,665 கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. ஆவினுக்கு அதிளவில் பால் உற்பத்தி செய்து தரும் பகுதியாக திருப்புவனம் உள்ளது.
கறவை மாடுகளுக்கு தினசரி 100 முதல் 150 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் தீவனங்களின் விலை இரு மடங்காக உயர்ந்ததால் செலவும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஒரு மூடை (50 கிலோ) தவுடு 300 ரூபாயில் இருந்து 600 ரூபாயாகவும், உளுந்து தூசி ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாகவும் துவரம் பருப்பு தூசி ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாயாகவும், எள்ளு புண்ணாக்கு ஆயிரத்து 250 ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாகவும், கடலை புண்ணாக்கு இரண்டாயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரத்து 750ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
பருத்தி விதை கறவை மாடுகளுக்கு சினை பிடிக்கவும், காளை மாடுகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்துவார்கள். கடந்தாண்டு கிலோ 65 ரூபாய் என விற்பனை செய்த நிலையில் இந்தாண்டு நூறு ரூபாயாக உயர்ந்து விட்டது.

