/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்தூரில் கண்மாய், ஊருணிகளில் சூழ்ந்துள்ள முட்புதர்களால் பாதிப்பு
/
திருப்புத்தூரில் கண்மாய், ஊருணிகளில் சூழ்ந்துள்ள முட்புதர்களால் பாதிப்பு
திருப்புத்தூரில் கண்மாய், ஊருணிகளில் சூழ்ந்துள்ள முட்புதர்களால் பாதிப்பு
திருப்புத்தூரில் கண்மாய், ஊருணிகளில் சூழ்ந்துள்ள முட்புதர்களால் பாதிப்பு
ADDED : டிச 26, 2025 05:27 AM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பகுதியில் கண்மாய்கள், ஊருணிகளில் தாமரை, அல்லிக் கொடி அதிகரிப்பதால் நீர் கொள்ளளவு பாதிப்பதுடன் பராமரிப்பு பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வானம் பார்த்த பூமி. மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தை நம்பியே உள்ளது. ஆண்டு முழுவதும் பயன்பாட்டிற்கான நீர் தேவைக்காக இப்பகுதியில் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட நீர் நிலைகள் ஆயிரக்கணக்கில் சங்கிலித் தொடராக உள்ளன.
ஒரு கண்மாய் நிரம்பி மறு கண்மாய், கண்மாயிலிருந்து குட்டைக்கு சென்று வடிகட்டி தெளிந்த நீர் குளம், ஊருணிகளில் சேகரமாகும். திருப்புத்தூர் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான கண்மாய், ஊருணிகள் உள்ளன.
கண்மாய்களிருந்து பாசனத்திற்கும்,ஊருணிகளில் தேங்கும் நீர் கால்நடைகளுக்கும் பயன்படுகின்றன. ஊருணியில்தேங்கும்நீரை மக்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது இந்த நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இது மட்டுமின்றி சீமை கருவேல மரங்கள், தாமரை, அல்லிக்கொடி வளர்ப்பு என்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளன.
நீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடிவதில்லை. மக்கள் பயன்பாடில்லாத நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி அழிந்து விடுகிறது. இதனால் நீர்நிலைகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

