/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில் தண்டவாளங்களில் மேயும் கால்நடைகளால் விபத்து அபாயம்
/
ரயில் தண்டவாளங்களில் மேயும் கால்நடைகளால் விபத்து அபாயம்
ரயில் தண்டவாளங்களில் மேயும் கால்நடைகளால் விபத்து அபாயம்
ரயில் தண்டவாளங்களில் மேயும் கால்நடைகளால் விபத்து அபாயம்
ADDED : அக் 27, 2025 04:19 AM

மானாமதுரை:  மானாமதுரையில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் நகர் பகுதிகளில் ரயில்வே தண்டவாளம் செல்லும் பகுதிகளில் மேயும் கால்நடைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்னைக்கு தினம்தோறும் 4க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், பல்வேறு மாநிலங்களுக்கு வாரம் ஒரு முறை மற்றும் 2,3முறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும்,4க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும், இதைத்தவிர ஏராளமான சரக்கு ரயில்களும் சென்று வருகின்றன. மானாமதுரையில் ரயில்வே ஸ்டேஷன் நகரப் பகுதியை ஒட்டி உள்ளதால் இப்பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற்றை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவதினால் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள செடிகளை மேய்ந்து வரும்போது ஏராளமான கால்நடைகள் ரயில்களில் அடிபட்டு பலியாகி வருகின்றன.
மேலும்  அடிபட்டு பலியாகும் கால்நடைகள் ரயில் இன்ஜினின் அடியில் சிக்கிக் கொள்வதால் ரயில்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. நேற்று முன்தினம் கூட ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக சென்ற பயணிகள் ரயில் அண்ணாதுரை சிலை ரயில்வே கேட் அருகே பசு மாடு மீது மோதி அவை ரயிலின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டு நீண்ட தூரம் இழுத்துச் சென்ற நிலையில் வைகை ஆறு மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் ரயில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டது.
மேலும் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வளாகப் பகுதிகளிலும் அதிக அளவில் கால்நடைகள் சுற்றி திரிவதாலும் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

