/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண்ணிடம் ரூ.30 லட்சம் பெற்று மோசடி 2 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீஸ்
/
பெண்ணிடம் ரூ.30 லட்சம் பெற்று மோசடி 2 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீஸ்
பெண்ணிடம் ரூ.30 லட்சம் பெற்று மோசடி 2 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீஸ்
பெண்ணிடம் ரூ.30 லட்சம் பெற்று மோசடி 2 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீஸ்
ADDED : அக் 25, 2025 01:10 AM

சிவகங்கை: இரிடியம் விற்பனை செய்து ரிசர்வ் வங்கியில் உள்ள ரூ.1000 கோடியை விடுவிக்க ரூ.1 லட்சம் கொடுத்தால், ரூ.1 கோடி திரும்ப கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி சிவகங்கை பெண் வள்ளியிடம் ரூ.30 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தேனி மாவட்டத்தை சேர்ந்த இருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே நெற்குப்பை ஆனந்த வள்ளி 45. இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரிய சங்கத்தை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
இச்சங்கத்திற்கு வரும் தேனி மாவட்டம், வருஷநாட்டை சேர்ந்த பழனியம்மாள் 37, அங்கிருந்தவர்களிடம் தான் தேனியில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், வெளிநாட்டிற்கு இரிடியம் விற்பனை செய்ததன் மூலம் ரூ.1,000 கோடி ரிசர்வ் வங்கியில் எங்கள் கணக்கில் இருப்பதாகவும் கூறி, போலி ஆவணங்களை காண்பித்துள்ளார். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் சிலரை அனுப்பி பெண்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
ரிசர்வ் வங்கியில் உள்ள ரூ.1000 கோடியை விடுவிக்க, அங்குள்ள அதிகாரிகளுக்கு செலவிட வேண்டும். இதற்காக ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், அந்த பணம் வந்ததும் ரூ.1 கோடி வரை வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய நெற்குப்பை ஆனந்த வள்ளி 45, தன்னிடம் இருந்த ரூ.30 லட்சத்தில் பழனியம்மாள் வங்கி கணக்கில் ரூ.20 லட்சம், அவரது கூட்டாளி தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஸ்ரீதர் 51, வங்கி கணக்கில் ரூ.10 லட்சத்தை செலுத்தினார்.
வாக்குறுதிபடி ரூ.30 கோடியை தராமல் ஏமாற்றினர். ஆனந்த வள்ளி சிவகங்கை சி.பி.சி.ஐ.டி.,யிடம் புகார் அளித்தார். பழனியம்மாள் 37, ஸ்ரீதரை 51 இன்ஸ் பெக்டர் கீதா கைது செய்தார்.
போலீஸ் தரப்பில் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் பேரில் போலியாக ஆவணங்கள் தயாரித்து தமிழகத்தில் மோசடி நடப்பதாக வங்கி அதிகாரிகள், டி.ஜி.பி.,யிடம் புகார் தெரிவித்தனர். அவரது உத்தரவுபடி இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நுாற்றுக்கணக்கானவர்களிடம் இதுபோன்று ரூ.பல கோடி வரை மோசடி செய்துள்ளனர், என்றனர்.

