/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை
/
திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை
ADDED : ஜூலை 15, 2025 06:30 AM

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக நேற்று சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் விசாரணையை துவக்கினர்.
நேற்று மாலை 5:00 மணிக்கு மடப்புரத்தில் சி.பி.ஐ., குழுவினர் விசாரணையை துவக்கினர். பொறுப்பு எஸ்.பி., சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி., சுகுமாறன், டி.எஸ்.பி., அமலஅட்வின் உள்ளிட்டோர் மடப்புரம் கோசாலையில் நடந்த விசாரணை குறித்து குழுவினரிடம் விளக்கினர். பிறகு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கோசாலை, உதவி ஆணையர் அலுவலகம், கோயில் வாகன பார்க்கிங், அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்று விசாரித்த இடங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையை நடத்திய பிறகு அவர்கள் மதுரை சென்றனர். இன்று இரண்டாவது நாளாக போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.