/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு அமைச்சர் பெரியகருப்பன் சாடல்
/
தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு அமைச்சர் பெரியகருப்பன் சாடல்
தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு அமைச்சர் பெரியகருப்பன் சாடல்
தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு அமைச்சர் பெரியகருப்பன் சாடல்
ADDED : ஏப் 01, 2025 06:17 AM
திருப்புத்துார்: ''மத்திய அரசு மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை மறைமுகமாக தமிழகத்தில்திணிக்க பார்க்கிறது. நிதியை ஒதுக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கப்பார்க்கிறது,'' என, திருப்புத்துாரில் அமைச்சர் பெரியகருப்பன் சாடினார்.
அவர் கூறியதாவது:
புதிய கல்விக்கொள்கையில் சமஸ்கிருதம், ஹிந்தி திணிக்கப்படுவதுடன் அவற்றின் வளர்ச்சிக்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் ரூ. 2000 கோடியை தர மறுக்கிறார்கள். நிதியை தராவிட்டாலும் பரவாயில்லை ஹிந்தித்திணிப்பை ஏற்க முதல்வர் ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தில்லோக்சபா சீட் குறைய வாய்ப்புள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் 8 லோக்சபா தொகுதிகள் வரை குறையும் நிலை உள்ளது.
இது எந்த விதத்தில் நியாயம். மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் தொகை குறைவினால் லோக்சபாவில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை. இதனால் முதல்வர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் இருந்தது. நான்கு மாதங்களாக மத்திய அரசு அதற்கு நிதி தர மறுக்கிறது. 11 ஆண்டுகளாக இத்திட்டத்தில் பல குளறுபடிகளை செய்து வருவதுடன்மத்திய அரசின் சார்பில் முழுமையாக நடைபெறும் இத்திட்டத்தின் கீழ் மக்களிடம் வேலை வாங்கிவிட்டு உரிய சம்பளம் வழங்க முடியவில்லை. இதன் மூலம் தமிழகத்தை வஞ்சிக்க பார்க்கிறார்கள்.
எத்தகைய அச்சுறுத்தலுக்கும் வஞ்சகத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் அடிபணிய மாட்டார். சமாளித்து வெற்றி காண்பார்.
கூட்டுறவு சங்கங்களில் அமைப்பு ரீதியான பணிகள்முடிந்ததும் கூட்டுறவு தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்து முடிவு எடுக்கும் என்றார்.

