ADDED : ஜன 02, 2026 05:37 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 18 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வொன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் 8 ஊராட்சி பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அங்கு ஒருவரே இரு ஊராட்சிகளை கவனித்து வருகின்றனர். ஒரே ஊராட்சியில் தொடர்ந்து பணிபுரிபவர்களை விருப்ப கவுன்சிலிங் மூலம் ஒன்றிய அளவில் பணியிடம் மாற்றம் செய்ய கோரிக்கை எழுந்தது. பல்வேறு காரணங்களால் ஒன்றிய நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் எஸ்.மாம்பட்டி ஊராட்சி செயலர் மகேஷ் தனது உடல்நிலையை காரணம் காட்டி தன்னை சிங்கம்புணரிக்கு அருகே உள்ள ஊராட்சிக்கு பணியிட மாறுதல் செய்ய கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மகேஷ் பிரான்மலை ஊராட்சிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரோடு சேர்த்து 18 ஊராட்சி செயலர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

