/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி சகாய மாதா சர்ச்சில் தேர் பவனி
/
காரைக்குடி சகாய மாதா சர்ச்சில் தேர் பவனி
ADDED : ஆக 16, 2025 11:51 PM

காரைக்குடி; காரைக்குடி செக்காலை துாய சகாய மாதா சர்ச் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேர்பவனி நடந்தது.
திருவிழா ஆக.8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை சிறப்பு திருப்பலி சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் நடந்தது. பாதிரியார் சார்லஸ், உதவி பாதிரியார் ஜேசுராஜ் மற்றும் அருட் தந்தையர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட, சகாய மாதா அன்னை தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. தேர்ப்பவனியில் திருச்செபமாலையும், நற்செய்தி வாசகமும், பாடல்களும் பாடப்பட்டன. இன்று காலை நிறைவு திருப்பலி சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் நடை பெறுகிறது.
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் அம்மாபட்டியில் புனித அலங்கார அன்னை சர்ச்சில் தேர்ப் பவனி திருவிழா நடந்தது.
இந்த சர்ச்சில் ஆக.9ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் தேர் பவனியை முன்னிட்டு இரவு 11:00 மணிக்கு பாதிரியார் அற்புத அரசால் ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சர்ச்சிலிருந்து அலங்கார அன்னை, காவல் துாதர் மைக்கேல் சம்மனசு ஆகிய சொரூபங்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் வைக்கப்பட்டு பவனி துவங்கியது. ஏற்பாட்டினை அம்மாபட்டி இறைமக்கள், சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள், நண்பர்கள் செய்தனர்.