/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்ட எல்லையில் செக் போஸ்ட், கேமராக்கள் அவசியம்! முக்கிய சந்திப்புகளில் குற்றங்கள் தடுக்கப்படுமா

ADDED : மார் 16, 2025 12:35 AM

சிவகங்கை மாவட்டத்தில் சில மாதங்களாக தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இவற்றை தடுப்பதற்கு போலீசாரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதத்தில் திருக்கோஷ்டியூர் அருகே கருங்குளம் கிராமத்தில் பூட்டியிருந்த இரண்டு வீட்டில் கொள்ளை, அதேபோல் தேவகோட்டை பகுதியில் அடுத்து அடுத்து கொள்ளை, காரைக்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை பகுதியில் தொடர்ச்சியாக டூவீலர் திருட்டு நடந்துள்ளது.
மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஆற்று மணல், கிராவல் மண் திருட்டு என குற்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. மாவட்டத்தின் எல்லை பகுதியான கீழசெவல்பட்டி, மலம்பட்டி, புழுதிப்பட்டி, இ.மலம்பட்டி, மணலுார், பூவந்தி, சருகனி செக்போஸ்ட்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
சிவகங்கை நகருக்குள் யார் வருகிறார்கள் யார் செல்கிறார்கள் என்று முழுமையாக கண்காணிக்க நகரின் முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும். தொடர் குற்ற சம்பவங்கள் ஈடுபடுபவர்களையும் அதிவேகமாக வாகனங்கள் செல்பவர்களையும் கண்காணிக்க வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பகுதிகளையும் சிசிடிவி கேமராவால் கண்காணிக்க வேண்டும். நாட்டரசன்கோட்டை, கீழப்பூங்குடி, மறவமங்கலம், புளியடிதம்பம், திருமாஞ்சோலை, மதகுபட்டி, ஒக்கூர், ஏரியூர், மல்லாக்கோட்டை, அரியக்குடி, புதுவயல் உள்ளிட்ட பகுதியில் மக்கள் அதிகம் நடமாடக்கூடிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் முன்வர வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இளைஞர்கள் முயற்சியுடன் முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமரா பொருத்தினால் குற்றங்கள் குறைந்து விடும்.