/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநில ஹாக்கி போட்டியில் சென்னை கல்லுாரிக்கு கோப்பை
/
மாநில ஹாக்கி போட்டியில் சென்னை கல்லுாரிக்கு கோப்பை
மாநில ஹாக்கி போட்டியில் சென்னை கல்லுாரிக்கு கோப்பை
மாநில ஹாக்கி போட்டியில் சென்னை கல்லுாரிக்கு கோப்பை
ADDED : ஆக 11, 2025 03:59 AM

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த மகளிருக்கான மாநில ஹாக்கி போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரி அணி வேலுநாச்சியார் நினைவு கோப்பையை வென்றது.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான மகளிருக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது.
இதில் மாநில அளவில் இருந்து 11 அணிகள் பங்கேற்றன. அரையிறுதியில் சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரி அணி, சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் கிளப் அணியும் விளையாடியதில், சிவகங்கை அணியை 2:0 கோல் கணக்கில் சென்னை அணி வென்றது.
2வது அரையிறுதியில் சென்னை விளையாட்டு மேம்பாட்டு அணியும், திருவாரூர் ஜீவி ஹாக்கி கிளப் அணியும் மோதியதில், 1:0 கோல் கணக்கில் திருவாரூர் அணி வென்றது.
இறுதி போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்., மகளிர் கல்லுாரி அணி, திருவாரூர் அணியும் மோதியதில், 1:0 கோல் கணக்கில் சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரி அணி வெற்றி பெற்று, வேலுநாச்சியார் நினைவு கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசு தொகை வழங்கப்பட்டது.