/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊழியர்கள் உண்ணாவிரதம்
/
குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊழியர்கள் உண்ணாவிரதம்
ADDED : நவ 21, 2025 04:59 AM

சிவகங்கை: புதுச்சேரியை போன்று குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊழியர்களுக்கு ரூ.19,500, உதவி யாளருக்கு ரூ.15,700 சம்பளம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்., ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத்தினர் சிவகங்கையில் உண்ணாவிரதம் நடத்தினர்.
சிவகங்கை அரண் மனைவாசல் முன் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் விக்டோரியா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் அழகம்மாள், உதயநிலா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேசுமேரி கோரிக்கையை விளக்கி பேசினார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் சங்க மாநில செயலாளர் செல்வக்குமார் துவக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க மாநில பொது செயலாளர் ஆர்.வாசுகி சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயப் பிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மிக்கேலம்மாள் நிறைவுரை ஆற்றினார்.
குறைந்தபட்ச பென்ஷன் ரூ.6750 வழங்க வேண்டும். ஆண்டுக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்படும் காலங் களுக்கு பிழைப் பூதியம் வழங்க வேண்டும் உட்பட 20 அம்ச கோரிக்கையை வலி யுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
மாவட்ட துணை தலைவர் இக்னிஸ் ஜோஸ்பின் ராணி நன்றி கூறினார்.

