காரைக்குடி: காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, தமிழிசை சங்கம் மற்றும் சிவகங்கை இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா நடந்தது. மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் மயிலாடுதுறை பொம்மலாட்ட கலைஞர் சோமசுந்தரம் குழுவினரின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது.
இதில், கலையை வளர்க்கும் சோமசுந்தரத்திற்கு பொம்மலாட்ட கலை வளர் செல்வர் என்ற விருது வழங்கப்பட்டது.
முதன்மை முதல்வர் அஜய் யுக்தேஷ் தலைமை ஏற்றார். தமிழிசைச் சங்க துணைத் தலைவர் ராகவன் முன்னிலை வகித்தார். கலைக்கோயில் நாட்டிய பள்ளி முதல்வர் சரளா பேசினார். இசைக்கலைஞர் நீலாயதாட்ஷி பொம்மலாட்ட கலை குறித்து பேசினார். இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி வரவேற்றார். தமிழ் இசை சங்க செயலாளர் சுந்தரராமன் நன்றி கூறினார்.
காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை மகாலட்சுமி வரவேற்றார். பள்ளிச் செயலர் கார்த்திக், முதல்வர் சங்கீதா ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையாசிரியர் ராதை கலந்து கொண்டனர். ஆசிரியை கனிமொழி நன்றி கூறினார்.

