/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை, இளையான்குடியில் பனி மழையில்லாததால் கருகும் நெற்பயிர்
/
மானாமதுரை, இளையான்குடியில் பனி மழையில்லாததால் கருகும் நெற்பயிர்
மானாமதுரை, இளையான்குடியில் பனி மழையில்லாததால் கருகும் நெற்பயிர்
மானாமதுரை, இளையான்குடியில் பனி மழையில்லாததால் கருகும் நெற்பயிர்
ADDED : நவ 16, 2025 04:16 AM

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடியில் கடந்த சில நாட்களாக காலை 8:00 மணி வரை கடுமையான பனிப்பொழிவு நீடிப்பதால் மழை இல்லாத நிலையில் நெற்பயிர்கள் கருகி வருகிறது.
மானாமதுரை, இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான எக்டேரில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக போதிய மழை இல்லாத காரணத்தினால் நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடி வருகிறது.
பனிப்பொழிவும் கடுமையாக இருப்பதால் நெற்பயிர்கள் விரைவில் கருகுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் மானாவாரியாக நெல் விதைகளை துாவி நெற்பயிர்கள் முளைத்து வருகிற நிலையில் கடுமையான பனிப்பொழிவு நீடிப்பதால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு ஈரத்தன்மை இல்லாமல் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
இந்த வருடம் போதிய விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் மேலும் நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.