sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா

/

மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா

மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா

மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா


ADDED : நவ 15, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 15, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை சக்தி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. முதல்வர் மாமுண்டி பிரவீன்ராஜ் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு கழக வளர்ச்சி அதிகாரி ராஜகுமாரன் பரிசு வழங்கினார்.

அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி குழந்தை பாதுகாப்பு பற்றி பேசினார். கலை நிகழ்ச்சி போட்டி நடந்து பரிசுகள் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக குழந்தைகள் தினவிழா மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் நடந்தது. காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூசையப்பர்பட்டணம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவிலூர் ஆண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, விசாலையன்கோட்டை கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளி, கல்லல் அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.புதுார் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒக்கூர் அரசு உயர்நிலைப் பள்ளிகள், சாக்கவயல் சிறுவானூர் அளவிடங்கான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகள் தினத்தை கொண்டாடினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி ஏற்பாடுகளை செய்தார்.

சிவகங்கை 21ஆம் நுாற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி அறங்காவலர் ராணி சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முதன்மை முதல்வர் விவேகானந்தன், பள்ளி முதல்வர் சங்கீதா, துணை முதல்வர்கள் அருணா தேவி, கனி, தலைமை ஆசிரியர் சாரதா, பொறுப்பாசிரியர்கள் பார்கவி, சோபியா உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மானாமதுரை: மானாமதுரை அருகே பெரிய கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கலை நிகழ்ச்சி,மாதிரி பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் வெங்கடாசலபதி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். ஆசிரியர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பறையங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் தலைமையில் நடந்தது. தமிழாசிரியர் இந்திரா காந்தி வரவேற்றார். பூமி ராஜா சுப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மூர்த்தி, செயலாளர் சங்கிலி கலந்து கொண்டனர். கணித ஆசிரியை புனிதவதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சரத்குமார் நன்றி கூறினார்.

மானாமதுரை செயின்ட் ஜோசப் நர்சரி பள்ளியில் விளையாட்டு விழா,குழந்தைகள் தின விழா, உலக கலை தின விழா நடைபெற்றது. மதுரை பாத்திமா கல்லூரி பேராசிரியை கலா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு,சான்றிதழ் வழங்கினார். தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி,நிர்வாகி சாலமன்,முதல்வர் ஜீவிதா மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர் ஆக்ஸ்போர்டு மழலையர் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா தாளாளர் விஜயன் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் அமுதாராணி வரவேற்றார்.

குழந்தைகள் தலைவர்கள், சமூக சேவகர்கள் வேடமணிந்து மாறுவேடப் போட்டியில் பங்கேற்றனர். ஆசிரியை மகேஸ்வரி தொகுத்து வழங்கினார்.

காரைக்குடி: காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கற்பக விநாயகம் பேசினார். பள்ளி தலைவர் சேதுராமன், முதன்மை முதல்வர் அஜய் யுக்தேஷ், முதல்வர் பரமேஸ்வரி கலந்து கொண்டனர்.

அமராவதிப் புதுார் ராஜராஜன் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகள் தின விழாவை கொண்டாடினர். நிர்மல் சிறப்புப் பள்ளி தாளாளர் ரெஜினா ராணி, ராஜராஜன் பள்ளி முதல்வர் வடிவாம்பாள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us