/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு அறிவியல் இயக்கம் அழைப்பு
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு அறிவியல் இயக்கம் அழைப்பு
குழந்தைகள் அறிவியல் மாநாடு அறிவியல் இயக்கம் அழைப்பு
குழந்தைகள் அறிவியல் மாநாடு அறிவியல் இயக்கம் அழைப்பு
ADDED : அக் 22, 2024 05:02 AM
சிவகங்கை: தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி கூறியதாவது: இந்த ஆண்டு நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற பொருளில் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. 11 வயது முதல் 17 வயதுள்ள பள்ளி மாணவர்கள் இருவர் குழுவாக சேர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி ஆசிரியர்கள் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்கள் கல்லுாரி மாணவர்களில் ஒருவரின் வழிகாட்டுதலில் நீர் சூழலும் பாதுகாப்பும், நீர் சார்ந்த பொது சுகாதாரமும் மருத்துவமும், நீர் சார்ந்த நோய்கள், நீர் அனைவருக்குமானது, நீர் பாதுகாப்பான பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்ப யுத்திகள் உள்ளிட்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆய்வு கட்டுரை தயாரித்து அதனை வரும் டிசம்பரில் நடைபெற உள்ள மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கட்டுரைகளாக சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு அறிவியல் ஆய்வுரை நிகழ்த்த வாய்ப்பு அளிக்கப்படும். மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து இளம் விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த மாநாட்டில் பங்கு கொள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேவற்கொடியோன் 94430 04322 மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் சாஸ்தா சுந்தரம் 99421 90845 மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் 93603 20559 ஆகியோரின் அலைபேசிகளில் தொடர்பு கொண்டு மாணவர்கள் ஆலோசனை பெறலாம் என்றார்.