/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு
/
பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு
ADDED : பிப் 10, 2024 04:48 AM

எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் கடுமையான பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வொன்றியத்தில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்திருந்தனர். பரவலாக செடிகள் வளர்ந்து காய்க்க துவங்கிய நிலையில் பெரும்பாலான செடிகளில் நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதித்தது. சில இடங்களில் ஒரு எடுப்புக்கு பின்னரும் மற்ற இடங்களில் அறுவடை செய்யாத நிலையிலும் செடிகள் பாதித்தது. இதனால் உழவுக்கூலியை கூட எடுக்க முடியாத நிலையில்
விவசாயிகள்
கவலையில் உள்ளனர்.
ரத்தினவேல், மேலவண்ணாரிருப்பு: சம்பா, குண்டு மிளகாய்களை நடவு செய்திருந்தேன். ஆரம்பத்தில் விளைச்சல் நன்றாக இருந்தது. ஆனால் முதல் எடுப்புக்கு பின்னர் வெள்ளை நிற பூச்சி தாக்குதல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. இலைகள் சுருண்டு மிளகாய் சுருங்கி போனது. இதனால் அடுத்தடுத்து காய் எடுப்பு பாதித்தது. எந்த ஆண்டும் இல்லாத முறையில் இந்தாண்டு மிளகாய் சாகுபடியில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.