/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இடிந்து விழும் போலீஸ் குடியிருப்புகள்; போலீசாரின் குடும்பத்தினர் அச்சத்தில் தவிப்பு
/
இடிந்து விழும் போலீஸ் குடியிருப்புகள்; போலீசாரின் குடும்பத்தினர் அச்சத்தில் தவிப்பு
இடிந்து விழும் போலீஸ் குடியிருப்புகள்; போலீசாரின் குடும்பத்தினர் அச்சத்தில் தவிப்பு
இடிந்து விழும் போலீஸ் குடியிருப்புகள்; போலீசாரின் குடும்பத்தினர் அச்சத்தில் தவிப்பு
UPDATED : செப் 15, 2025 08:19 AM
ADDED : செப் 15, 2025 04:25 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் கான்கிரீட் கூறை மற்றும் சுவர்கள் பெயர்ந்துவிழுவதால், ஒருவித அச்சத்துடன் போலீசார் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
சிவகங்கை வாரச்சந்தை அருகே நகர் போலீசாருக்கு 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளது. இதில் 40 டவுன் போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இந்த குடியிருப்புகள் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த கட்டடங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் கூரைகள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. சில கட்டடங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அடிக்கடி கான்கிரீட் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் சேதம் அடைந்துள்ள கட்டடத்தில் குடியிருக்க போலீசார் குடும்பங்கள் அச்சப்படுகின்றனர்.
மாவட்ட ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் 24 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 12 வீடுகள் உள்ளது. இதில் தற்போது 70க்கும் மேற்பட்ட ஆயுதபடை போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இந்த குடியிருப்புகள் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த கட்டடங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் கூரைகள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. சில கட்டடங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அடிக்கடி கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுகிறது.
இதனால் சேதம் அடைந்துள்ள கட்டடத்தில் குடியிருக்க போலீசார் அச்சப்படுகின்றனர். காரைக்குடியில் 1961ம் ஆண்டு போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. 50 ஓட்டு வீடுகள் உள்ளது. தற்போது 30க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த கட்டடத்தின் மத்தியில் சில போலீசார், தங்களது குடும்பத்துடன் தங்கி உள்ளனர். அருகில் புதிய போலீசார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. வீடுகள் கிடைக்காததாலும் போதிய இட வசதி இல்லாததாலும் சேதமடைந்த ஓட்டுக் கட்டடத்திலேயே சிலர் தங்கி உள்ளனர். கூரை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்திலேயே குடியிருந்து வருகின்றனர்.
காளையார்கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டபட்ட போலீசார் குடியிருப்பு உள்ளது.
தற்போது குடியிருப்பு கட்டடங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
இங்குள்ள 40க்கும் மேற்பட்ட போலீசார் தங்களின் குடும்பத்துடன் தனியார் வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள போலீசாரின் குடியிருப்புகள் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது.
இவற்றால் போலீசாரின் குடும்பங்கள் அச்சத்துடன் வாழும் சூழல் உள்ளது. என மாவட்ட நிர்வாகம் மாவட்ட முழுவதிலும் சேதம் அடைந்துள்ள போலீசாரின் குடியிருப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.