/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மூடிய கால்நடை மருந்தகம் கால்நடை வளர்ப்போர் அவதி
/
மூடிய கால்நடை மருந்தகம் கால்நடை வளர்ப்போர் அவதி
ADDED : ஜன 07, 2025 04:55 AM

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் அடிக்கடி மூடப்படும் கால்நடை கிளை மருந்தகத்தால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமமடைந்து வருகின்றனர்.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சி உள்ளது. 10க்கும் மேற்பட்ட சிற்றூர்களும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன.
சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொத்தமங்கலம் ஊராட்சியில் கால்நடை கிளை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகம் அடிக்கடி மூடி கிடப்பதாலும் தாமதமாக திறப்பதாலும், விவசாயிகள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க கோட்டையூர் செல்ல வேண்டி உள்ளது. எனவே, முறையாக கால்நடை கிளை மருந்தகத்தை திறக்கவும் டாக்டர்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.