/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இலவச பஸ் பாஸ் விரும்பாத மாணவர் பட்டியல் சேகரிப்பு
/
இலவச பஸ் பாஸ் விரும்பாத மாணவர் பட்டியல் சேகரிப்பு
ADDED : ஜூலை 26, 2025 08:35 AM
சிவகங்கை : தமிழகத்தில் இலவச பஸ் பாஸ் விரும்பாத மாணவர்கள் பட்டியலை சேகரித்து, பள்ளி மேலாண்மை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் வீடுகளில் இருந்து பள்ளிக்கு சென்றுவர இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டிற்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அரசு பஸ்களில் பயணிக்க விருப்பம் இல்லாத, பஸ் பாஸ் வேண்டாம் என கூறும் மாணவர்கள் பட்டியலை சேகரித்து விபரங்களை 'எமிஸ்' ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.