/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
/
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
ADDED : ஜூன் 04, 2025 12:59 AM
சிவகங்கை: பள்ளி, கல்லுாரி, பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ.,க்களில் படிக்கும் பிற்பட்ட,மிக பிற்பட்ட,சீர்மரபினர், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் 45 மாணவ, மாணவிகள் விடுதி செயல்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு 21, மாணவிகளுக்கு 14, கல்லுாரி மாணவர், மாணவிக்கு தலா 5 விடுதிகள் செயல்படுகின்றன.
4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர், இளங்கலை, முதுகலை, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிக்கும் கல்லுாரி மாணவர்கள் இந்தவிடுதியில் சேர தகுதி பெறுகின்றனர்.
விடுதியில் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், பிளஸ் 2 படிக்கும் மாணவருக்கு நீட், ஜெ.இ.இ., நுழைவு தேர்வு முக்கிய வினாக்கள், சிறப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும். விடுதிகளில் சேர பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்.
கல்வி நிலையத்தில் இருந்து வீட்டிற்கான துாரம் குறைந்தது 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும்.
பள்ளி விடுதியில் சேருவதற்கான விண்ணப்பம் அந்தந்த விடுதி காப்பாளர், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் ஜூன் 18க்குள் வழங்க வேண்டும்.
கல்லுாரி விடுதியில் சேர ஜூலை 15க்குள் சமர்பிக்க வேண்டும். ஒவ்வொரு முகாமிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் வழங்கப்படும், என்றார்.