/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ரூ.4.6 கோடியில் தோட்டக்கலை பயிர் விரிவாக்கம் கலெக்டர் பொற்கொடி தகவல்
/
சிவகங்கையில் ரூ.4.6 கோடியில் தோட்டக்கலை பயிர் விரிவாக்கம் கலெக்டர் பொற்கொடி தகவல்
சிவகங்கையில் ரூ.4.6 கோடியில் தோட்டக்கலை பயிர் விரிவாக்கம் கலெக்டர் பொற்கொடி தகவல்
சிவகங்கையில் ரூ.4.6 கோடியில் தோட்டக்கலை பயிர் விரிவாக்கம் கலெக்டர் பொற்கொடி தகவல்
ADDED : ஜூலை 02, 2025 07:27 AM
சிவகங்கை தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் ரூ.4.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் தோட்டக்கலை பயிர்கள் விரிவாக்க பணி நடைபெற உள்ளதாக கலெக்டர் கே.பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, காய்கறி, மா, கொய்யா, பப்பாளி, பலா, நெல்லி, முந்திரி, அத்தி மற்றும் டிராகன் பழ பரப்பு விரிவாக்கம், மல்லிகை, சம்பங்கி, கருப்பு மிளகு, கொத்தமல்லி, கருவேப்பிலை பரப்பு விரிவாக்கம், பழைய தோட்டங்கள் புதுப்பித்தல், பறவை தடுப்பு வலை, தேனீ வளர்ப்பு, பண்ணை குட்டை அமைத்தல், மண்புழு உரக்கூடம், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், நடமாடும் காய்கறி வண்டி, சீமை கருவேல் மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்தல் பணி மேற்கொள்ளப்படும்.
இத்திட்டங்களில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், ரேஷன், ஆதார் கார்டு, நில வரைபடம், விவசாயி புகைப்படம், மண், நீர் பரிசோதனை அட்டை ஆகியவற்றுடன் https://tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம், பிரதமரின் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பழம், முருங்கை சாகுபடி பரப்பு விரிவாக்கம், நிரந்தர பந்தல் அமைத்தல், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி, தென்னை, முந்திரி, ரோஜா, பூச்சி மேலாண்மை, தென்னை வெள்ளை சுருள் ஈ, முந்திரி தோட்டம் புதுப்பித்தல் ஆகிய திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதே போன்று எண்ணெய் பனை விரிவாக்கம், பராமரிப்பு, ஊடுபயிர் சாகுபடி, மூங்கில் இயக்க திட்டத்தின் கீழ் மூங்கில் பரப்பு விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடக்க உள்ளது.
ரூ.7.47 கோடியில் நுண்ணீர் பாசனம்
ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாயிகளை தேர்வு செய்து, நுண்ணீர் பாசன திட்ட பொருட்களை வழங்க ரூ.7.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் குழாய் கிணறு கட்டுதல் பயனாளிகள் தேர்வு செய்தல், காய்கறி விதை, பழச்செடி தொகுப்பு திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வது, ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காய்கறி, பழ சாகுபடி, பல்லாண்டு தாவரம் விரிவாக்கம், தென்னை நாற்றுகள் விநியோகம் போன்ற திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.