sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கிராம ஊராட்சியில் நேரடியாக பெற்ற கட்டட வரைபட அனுமதி செல்லாது கலெக்டர் எச்சரிக்கை

/

கிராம ஊராட்சியில் நேரடியாக பெற்ற கட்டட வரைபட அனுமதி செல்லாது கலெக்டர் எச்சரிக்கை

கிராம ஊராட்சியில் நேரடியாக பெற்ற கட்டட வரைபட அனுமதி செல்லாது கலெக்டர் எச்சரிக்கை

கிராம ஊராட்சியில் நேரடியாக பெற்ற கட்டட வரைபட அனுமதி செல்லாது கலெக்டர் எச்சரிக்கை


ADDED : மே 30, 2025 03:23 AM

Google News

ADDED : மே 30, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: கிராம ஊராட்சிகளில் 2023 அக்., முதல் நேரடியாக கட்டட வரைபட அனுமதி பெற்றது செல்லாது. அவற்றை முறைப்படுத்தாவிட்டால் வீட்டிற்கான மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: அனைத்து கிராம ஊராட்சிகளில் வீடுகள், தொழில் வணிக கட்டடம் கட்டுவோர் கட்டட வரைபட அனுமதியை 2023 அக்., 1 முதல் இணைய தளம் மூலம் மட்டுமே விண்ணப்பித்து பெற்றிருக்க வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்காமல், கிராம ஊராட்சிகளில் நேரடியாக கட்டட வரைபட அனுமதி பெற்றிருந்தால், அந்த அனுமதி செல்லாது என அறிவிக்கப்படுகிறது.

நேரடியாக கட்டட வரைபட அனுமதி பெற்றவர்கள், முறைப்படுத்தி கொள்ள வாய்ப்பு தரப்படுகிறது. மேலும் 2,500 முதல் 3,500 சதுர அடி வரையிலான கட்டட பரப்பில் தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்புகள் கட்டுவதற்கு கவுன்சிலிங் முறையில் சுய சான்று அடிப்படையில் வரைபட அனுமதி உடனே வழங்கப்படும்.

உரிய அனுமதி பெறாத வீடு, தொழில் நிறுவனங்களுக்கு வீடு, தொழில் வரி கிராம ஊராட்சிகளில் வழங்கப்படமாட்டாது. குடிநீர் இணைப்பு இருந்தால் துண்டிக்கப்படும். மின் இணைப்பை மின்வாரியம் மூலம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியற்ற கட்டடங்கள் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் இருந்தால், அவற்றை அகற்ற விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் www.onlineappa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே கட்டட வரைபட அனுமதிக்கு விண்ணப்பித்து பெற வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us