/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகராட்சி ஊழியர்களை தாக்கிய மாடு உரிமையாளர்கள் மீது புகார்
/
நகராட்சி ஊழியர்களை தாக்கிய மாடு உரிமையாளர்கள் மீது புகார்
நகராட்சி ஊழியர்களை தாக்கிய மாடு உரிமையாளர்கள் மீது புகார்
நகராட்சி ஊழியர்களை தாக்கிய மாடு உரிமையாளர்கள் மீது புகார்
ADDED : நவ 26, 2024 05:11 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை பறிமுதல் செய்து அடைத்து வைத்திருந்த மாடுகளை ஊழியர்களை தாக்கி அவிழ்த்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை நகராட்சியில் பொது சுகாதாரம் சார்பில் சிவகங்கை நகர் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்படும் என சிவகங்கை நகர் பகுதி முழுவதும் நகராட்சி சார்பில் அறிவிப்பு செய்து ஆட்டோ மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக மூலமும் அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டது.
அறிவிப்புக்கு பிறகும் நகரில் சுற்றி திரிந்த 14 மாடுகளை பிடித்து மதுரை ரோடு வாட்டர் டேங்கில்அடைத்து வைக்கப்பட்டது. பாதுகாப்பாக நகராட்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் இருந்தனர்.
சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு வாட்டர்டேங்க் பகுதிக்கு வந்த சிலர் பணியில் இருந்தவர்களை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி மாடுகளை அவிழ்த்து சென்றுள்ளனர்.
இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சிவகங்கை நகர் போலீசில்புகார் அளித்துள்ளனர். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.