/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் குப்பைக்கு தீவைப்பு மரங்களை சேதப்படுத்துவதாக புகார்
/
திருப்புவனத்தில் குப்பைக்கு தீவைப்பு மரங்களை சேதப்படுத்துவதாக புகார்
திருப்புவனத்தில் குப்பைக்கு தீவைப்பு மரங்களை சேதப்படுத்துவதாக புகார்
திருப்புவனத்தில் குப்பைக்கு தீவைப்பு மரங்களை சேதப்படுத்துவதாக புகார்
ADDED : ஜன 04, 2024 02:16 AM

திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ளாட்சி அமைப்பு மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை மரங்களுக்கு அடியில் கொட்டி தீ வைப்பதால் மரங்கள் அழிந்து வருகின்றன.
திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தினசரி உள்ளாட்சி அமைப்பு மூலம் குப்பை சேகரிக்கப்படுகின்றன. திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், தட்டான்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தினசரி பிளாஸ்டிக் , இறைச்சி கழிவு, அழுகிய பழ கழிவு உள்ளிட்ட பல்வேறு குப்பை சேகரிக்கப்படுகின்றன.
உள்ளாட்சிகளில் குப்பைகளை தரம் பிரிக்க போதிய இடம் ஒதுக்கப்பட்டாலும் நடைமுறையில் யாரும் அதனை பயன்படுத்துவது இல்லை. கண்மாய், வாய்க்கால், வரத்துகால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் மரங்களுக்கு அடியில் கொட்டி வைத்து விடுகின்றனர். சற்று காய்ந்த உடன் அதில் தீ வைப்பதால் மரங்களும் சேர்ந்து எரிந்து சாம்பலாகின்றன. மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குப்பையை தரம்பிரித்து அழிக்க வலியுறுத்தியும் உள்ளாட்சி அமைப்புகள் அதனை செய்ய முன்வருவதில்லை. அதிகாரிகளும் கண்காணிப்பது இல்லை. குப்பைகளில் இருந்து உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை உள்ளாட்சி அமைப்பு முன்னெடுப்பதும் இல்லை.
திருப்புவனம் அருகே லாடனேந்தலில் சாலையின் இருபுறமும் 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் நெருக்கமாக வளர்ந்துள்ளன. இந்த மரங்களுக்கு இடையே குப்பையை கொட்டி தீ வைக்கின்றனர். அருகிலேயே உயர்நிலைப்பள்ளி, கோயில்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ள நிலையில் தினசரி குப்பைகளில் தீவைப்பதால் அருகில் உள்ள பனை மரங்கள் காய்ந்து வலுவிழந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் குப்பைகளை கொட்டி தீ வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.