/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் சிலம்ப போட்டி முடிவு வெளியாகவில்லை என புகார்
/
காரைக்குடியில் சிலம்ப போட்டி முடிவு வெளியாகவில்லை என புகார்
காரைக்குடியில் சிலம்ப போட்டி முடிவு வெளியாகவில்லை என புகார்
காரைக்குடியில் சிலம்ப போட்டி முடிவு வெளியாகவில்லை என புகார்
ADDED : செப் 27, 2024 06:32 AM
சிவகங்கை: முதல்வர் கோப்பை சிலம்ப போட்டியில் முதலிடம் வந்த கல்லுாரி மாணவர் முனீஸ்- முடிவு வெளியிடாததை கண்டித்து, கலெக்டர் பி.ஏ.,(பொது) விடம் புகார் செய்தார்.
காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் படிப்பவர் முனீஸ் 18. இவர் சிலம்பம் பயிற்சி பெற்றுள்ளார். முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்றார்.
காரைக்குடியில் செப்., 15 அன்று முதல்வர் கோப்பைக்கான 65-- 85 கிலோ எடை பிரிவில் விளையாட இம்மாணவர் பங்கேற்றார். இதில் முதலிடம் பிடித்தார். முதல்வர் கோப்பை சிலம்பம் போட்டியில் 65-- 75 கிலோ எடை பிரிவுக்கு போட்டி உண்டா, இல்லையா என அறிவிக்கவில்லை. இதனால், குழப்பம் அடைந்த நடுவர்கள் 65--75 எடை பிரிவினருக்கான சிலம்பம் போட்டியை நடத்தினர். இதிலும், மாணவர் முனீஸ் பங்கேற்று, முதலிடம் பிடித்தார். ஆனால், இரண்டு முடிவுகளையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் அக்., 5 முதல் 9ம் தேதி வரை முதல்வர் கோப்பைக்கான மாநில சிலம்ப போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த முனீஸ் க்கு முடிவுகளை அறிவிக்காததால் அதிருப்தியானார். நேற்று காலை கலெக்டரிடம் புகார் அளிக்க வந்தார். அங்கிருந்த கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவனிடம் மனு அளித்தார். அவர் உடனே மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணாவின் விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
மாநில போட்டிக்கு தேர்வு
விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா கூறியதாவது: காரைக்குடி மாணவர் முனீஸ் -க்கு 65- -- 75 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்றதாக ரிசல்ட் அறிவித்து விட்டோம். அவரை மாநில போட்டியில் பங்கேற்க அனுமதி கடிதம் வழங்கிவிட்டோம், என்றார்.

