/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டிற்கு இடம் நகராட்சி அதிகாரிகளிடம் குழப்பம்
/
தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டிற்கு இடம் நகராட்சி அதிகாரிகளிடம் குழப்பம்
தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டிற்கு இடம் நகராட்சி அதிகாரிகளிடம் குழப்பம்
தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டிற்கு இடம் நகராட்சி அதிகாரிகளிடம் குழப்பம்
ADDED : ஜூலை 15, 2025 03:36 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் இடநெருக்கடி காரணமாகதற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் தினசரி மார்க்கெட்டை அகற்றி விட்டு ரூ.12 கோடியில் விரிவாக புது பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு விழாவும் முடிந்து விட்டது.
இந்த நிலையில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டும் வரை தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு நகராட்சி அதிகாரிகள் இடம் தேடி வருகின்றனர். பல இடங்கள் பார்த்து இருந்தாலும் தேர்வு செய்வதில் குழப்பத்தில் உள்ளது.
ஏற்கனவே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட்ட சிவன் கோயில் எதிரே உள்ள திடல், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில்உள்ள ஒன்றரை ஏக்கர் இடம், திருப்புத்துார் ரோட்டில் தனியார் இடம், வேறு சில இடங்களையும் பார்வையிட்டனர்.
இடத்தை தேர்வு செய்து அறிவித்து விட்டால் தற்போது பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைக்காரர்கள் புது இடத்திற்கு மாற்றம் செய்து பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்என கூறுகின்றனர்.
தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நகராட்சியே கடைகளை அமைத்து தருமாறும் வியாபாரிகள் கோரிக்கை வைத்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள்மத்தியில் இடம் தேர்வில்தொடர்ந்து குழப்ப நிலையே உள்ளது.
இடம் தேர்வு செய்து தற்போதைய பஸ் ஸ்டாண்டை காலி செய்யாத நிலையில், பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்குவதில் மந்தமாக உள்ளது.