ADDED : ஜூலை 15, 2025 03:36 AM
சிவகங்கை: மதுரையில் இருந்து சூராணம் வரை சென்ற அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் பஸ் வசதியின்றி சிரமப்படுகின்றனர்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரையில் இருந்து தினமும் மாலை 6:45 மணிக்கு புறப்படும் பஸ், சிவகங்கை, காளையார்கோவில், வேளாரேந்தல், இலந்தக்கரை, கோடிக்கரை வழியாக சூராணத்திற்கு இரவு 9:45 மணிக்கு சென்று சேரும்.
அங்கு இரவில் தங்கும்இந்த பஸ் மறுநாள் காலை 5:40 மணிக்கு சூராணத்தில் புறப்பட்டு வேளாரேந்தல் வழியாக சாத்தரசன்கோட்டை, சிவகங்கை வழியாக மதுரைக்கு சென்று சேரும்.
இந்த பஸ் மூலம் காளையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கோடிக்கரை, இலந்தக்கரை, வேளோரந்தல் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிவகங்கை, காளையார்கோவில், மதுரைக்கு சென்று வர ஏதுவாக அமைந்திருந்தது.
இந்நிலையில் தார்ரோடு பணிக்காக நிறுத்தப்பட்ட இந்த பஸ்சை ரோடு பணி முடிந்து பல மாதங்களாகியும், மீண்டும் இயக்காமல்உள்ளனர். அரசு போக்குவரத்து கழக நிர்வாகம்மதுரை -- சூராணம் இடையே மீண்டும் பஸ் இயக்க வேண்டும்.