ADDED : ஜூலை 15, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லல்: கல்லல் அரசு மகளிர் உயர்நிலை பள்ளிக்கு ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ளகிரடிட் அக்சஸ், கிராமின் திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினர்.
பள்ளி தலைமை ஆசிரியை சாந்திராணி தலைமை வகித்தார். கோட்ட மேலாளர் நவநீத கிருஷ்ணன், மண்டல மேலாளர் மதியழகன், கிளை மேலாளர் அருண் குமார், வட்ட மேலாளர் பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை தமிழரசி வரவேற்றார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். மாணவிகளுக்கு தேவையான தளவாட சாமான்கள் இந்நிதியின் மூலம் வழங்கப்பட்டது. ஆசிரியை சொர்ணலதா நன்றி கூறினார்.