நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: திருநெல்வேலி மேலப்பாளையம் தங்கசாமி மகன் சாமுவேல் 35. இவர் தனது ஊரைச் சேர்ந்த மேஸ்திரி பாலமுருகன் 38 என்பவருடன்காளையார்கோவில் மின்வாரியம் அலுவலகம் எதிரே புதிதாக கட்டும் வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணிக்காக வந்துள்ளார்.
அன்று இரவு சாமுவேல் உள்ளிட்ட தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு துாங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு சாமுவேலை காணவில்லை என்று தேடியுள்ளனர். சாமுவேல் லிப்ட் கட்டும் கட்டடத்துக்குள் காயமடைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சாமுவேல் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.