ADDED : ஜூலை 23, 2025 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்:குடும்ப தகராறில், தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
சிவகங்கை, நயினார் பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம், 38; பரோட்டா மாஸ்டர். இவரது மனைவி ரேவதி, 33. இவர்களுக்கு ஜனனி, 11, வருண பகவான், 8, வெற்றிவேல், 6, என, மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ஆறுமுகத்திற்கும், ரேவதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. வழக்கம்போல், நேற்று காலை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ரேவதி சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகமும் மனைவி யின் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

