ADDED : நவ 29, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பசுமாடு மின்சாரம் தாக்கி இறந்தது.
சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த போஸ் என்பவரின் பசுமாடு அப்பகுதியில் உள்ள கண்மாயில் நேற்று மேய்ந்து கொண்டிருந்தது. கண்மாயில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தது.
மின் ஊழியர்கள் மின் இணைப்பைத் துண்டித்தனர்.