
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரியில் பாரா ஸ்போர்ட்ஸ் சென்டர் சார்பில் தேசிய அளவிலான வீல் சேர் டி - 20 கிரிக்கெட் போட்டி நடந்தது.
அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரி உமையாள் ஸ்டேடியத்தில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான
இரண்டு நாள் டி - 20 கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடந்தது. அழகப்பா பல்கலை துணை வேந்தர் க.ரவி தொடங்கி வைத்தார்.
பாரா ஸ்போர்ட்ஸ் சென்டர் ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி, துணை ஒருங்கிணைப்பாளர் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2 நாள் நடைபெறும் டி- 20 யில் மூன்று போட்டிகள் நடைபெறும்.
இதில், இரண்டு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.
போட்டியை அழகப்பா பாரா ஸ்போர்ட்ஸ் சென்டர் மற்றும் வீல் சேர் கிரிக்கெட் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு, தலைவர் ராமச்சந்திரன், முதன்மை செயல் அலுவலர் கஜேந்திரன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.