/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் ஆடல், பாடல் நிகழ்ச்சி
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் ஆடல், பாடல் நிகழ்ச்சி
ADDED : ஆக 30, 2025 03:55 AM

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் விரிவாக்க பணி நடக்கும் நிலையில் குறுகிய இடத்தில் செயல்படும் பஸ்ஸ்டாண்ட் உட்பகுதியில் மேடை அமைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவகங்கையில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி நடைபெற்று வருவதால், ஒரு பகுதி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
அந்த பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல முடியாமல் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்டின் முகப்பு பகுதியில் சிறிய அளவிலான கோயில் உள்ளது.இந்த கோயில் கும்பாபிேஷகம் நேற்றுமுன்தினம் நடந்தது.
விழாவையொட்டி கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதால், பஸ்களை பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்த முடியாமல் வெளியே மதுரை தொண்டி ரோட்டில் நிறுத்தப்பட்டன.
குறுகிய இடத்தில் செயல்படும் பேருந்து நிலையத்திற்குள் மேடை அமைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த நகராட்சி அனுமதி அளித்ததே தவறு என பயணிகள் புலம்பினர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மக்களுக்கு சிரமம் தரும் இடங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவையும் பொருட்படுத்தாமல் பேருந்து நிலையத்திலேயே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை நகராட்சி கமிஷனர் பொறுப்பு அசோக்குமார், பொறியாளர் முத்துவிடம் கேட்ட போது, நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. எங் களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.

