/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அலங்கார தேர்பவனி
/
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அலங்கார தேர்பவனி
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அலங்கார தேர்பவனி
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அலங்கார தேர்பவனி
ADDED : ஏப் 07, 2025 07:09 AM

இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த மின் அலங்கார தேர்பவனி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் 29ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது நேற்று மின் அலங்கார தேர்பவனியை முன்னிட்டு உற்ஸவர் முத்துமாரியம்மன் அலங்காரத்தில் கோயில் முன் தேருக்கு எழுந்தருளினார்.
இரவு 7:20 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்து நிலையை அடைந்தது.பின்னர் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.
விழாவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்,கோயில் பணியாளர்கள்,முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தமிழரசன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி, அ.தி.மு.க.,ஓ.பி.எஸ்.,அணி ஒன்றிய செயலாளர் கனகராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கீர்த்தனா மற்றும் தாயமங்கலம் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.நாளை 8ம் தேதி திருக்கோயில் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

