/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழையனுார் கண்மாய் மராமத்து பணிக்கு நிதி ஒதுக்கீடு தாமதம்
/
பழையனுார் கண்மாய் மராமத்து பணிக்கு நிதி ஒதுக்கீடு தாமதம்
பழையனுார் கண்மாய் மராமத்து பணிக்கு நிதி ஒதுக்கீடு தாமதம்
பழையனுார் கண்மாய் மராமத்து பணிக்கு நிதி ஒதுக்கீடு தாமதம்
ADDED : நவ 23, 2024 06:29 AM

பழையனுார்; பழையனுார் கண்மாய் மராமத்து பணிகளுக்கு தொடர்ச்சியாக நிதி ஒதுக்கப்படாததால் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
442 எக்டேர் பரப்பளவுள்ள பழையனுார் கண்மாயை நம்பி ஆயிரத்து 800 ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. வைகை ஆற்றில் இருந்து 10 கி.மீ., துாரத்திற்கு நீர் வரத்து கால்வாய் உள்ளது. வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது பழையனுார் கண்மாய்க்கும் தண்ணீர் திறக்கப்படும்.
பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால் போதிய தண்ணீர் தேக்க முடியவில்லை. எனவே கண்மாயை துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து கடந்தாண்டு ஒரு கோடியே 40 லட்சத்து 957 ரூபாய் செலவில் துார் வார முடிவு செய்யப்பட்டது. ஒன்பது மடைகளை சீரமைக்கவும் ஒன்பது கி.மீ., சுற்றளவுள்ள கண்மாய் கரையை உயர்த்தி, கரையை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி கடந்த ஒரு வருடமாக நடந்து வந்தன. முதல் கட்டமாக 35 லட்ச ரூபாய் நிதி மட்டும் விடுவிக்கப்பட்டதால், ஏழு மடைகள் மட்டும் வரத்து கால்வாய் துார் வாரப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில்: வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் நெல் நடவு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் பழையனுாரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் விவசாய பணிகள் தொடங்கவே இல்லை. சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் பழையனுார் கண்மாய்க்கு தண்ணீர் வருமா என தெரியவில்லை. மடைகள் முழுமையாக சீரமைக்கவில்லை, என்றனர்.
பொதுப்பணித்துறையினர் கூறுகையில்: கண்மாய் பணிக்கு நிதி சிறிது சிறிதாக தான் விடுவிக்கப்படுகிறது. விடுவிக்கப்படும் நிதிக்கு ஏற்ப பணிகள் நடந்து வருகின்றன. திட்ட மதிப்பீட்டில் உள்ளபடி பணிகள் நிறைவேற்றப்படும், என்றனர்.
விடுவிக்கப்படும் நிதிக்கு ஏற்ப பணிகள் நடப்பதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
நிதியை ஒதுக்கி முழுமையாக விரைவுபடுத்தி கண்மாயை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.